Sunday, November 10, 2013

இப்படியும் ஒரு கதர் சட்டை!!!



தற்போதைய அரசியல்வாதிகள் யாரும்
இதை படிக்கவோ பார்க்கவோ வேண்டாம்...மனசு
க்கு ஒரு மாதிரி இருக்கும்...

எம்.எல்.எ.-வாக எம்.பி-யாக
இருந்தது மட்டுமில்லை... காமராஜர்
ஆட்சியில் பத்து ஆண்டுகள்
மந்திரியாக வேறு இருந்தவர்...
அதுவும் பொதுப்பணித்துறை
மந்திரி... மேட்டூர் அணை,
வைகை அணை எல்லாம்
கட்டுமானப்பணி மேற்கொண்டவர்...
தன் வயதான காலத்தில்
மதுரை அரசு பொது மருத்துவமனையில்
படுக்கை வசதி கூட இல்லாமல்
தரையில் படுத்து இருந்தவர்...

எம்.ஜி.யார். வந்து சந்தித்த
பிறகே அந்த
மருத்துவமனை ஊழியர்களுக்கு இவர்
யார் என்பதே தெரியும்...
எதையாவது தாங்கள்
பெற்றுக்கொண்டே ஆக வேண்டும் என
எம்.ஜி.ஆர்
தொடர்ந்து வற்புறுத்தவே அரசு பஸ்ஸில்
பயணம் செய்ய இலவச பஸ் பாஸ்
மட்டும் போதும் என்று பெற்றுக்
கொண்டவர்..

தியாகி கக்கன் அவர்கள்!

சிந்திக்க வைத்த கதை!



"ஒரு கல்லூரியில் நான்கு நண்பர்கள் படித்துக் கொண்டிருந்தார்கள். தாவரவியல் மாணவர்கள். ஒரே ஒரு பரீட்சையைத் தவிர, மற்ற எல்லா பரீட்சையும் எழுதிவிட்டார்கள். மிச்சமிருந்த ஒரு பரீட்சைக்கு இன்னும் ஒரு வார காலம் இருந்தது.

மேலும், அது சுலபமான பேப்பர் என்பதால், இடைப்பட்ட காலத்தில் பக்கத்தில் இருந்த ஒரு மலைவாச ஸ்தலத்துக்கு பிக்னிக் போனார்கள். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என ஜாலியாக இருந்தார்கள். அவர்கள் கிளம்ப வேண்டிய தருணம் வந்தது.

அப்போது ஒரு நண்பன், "கிளைமேட் அருமையாக இருக்கிறது. இன்றிரவும் இங்கே தங்கிவிட்டு, நாளை காலை ஆறு மணிக்கு காரில் கிளம்பினால் போதும். பரீட்சை நேரத்துக்கு கல்லூரி போய்விடலாம்" என்றான்.

அதுவும் சரிதான் என்று நண்பர்கள் அன்று முழுவதும் அங்கேயே கோலாகலமாக கழித்துவிட்டு, இரவு தாமதமாக தூங்கினார்கள். நெடுநேரம் கழித்தே கண் விழித்தார்கள். 'சரி, பேராசிரியரிடம் ஏதாவது பொய் சொல்லி, மாற்றுப் பரீட்சைக்கு ஏற்பாடு செய்து கொள்ளலாம்' என்ற நம்பிக்கையோடு புறப்பட்டார்கள்.

பேராசிரியர் முன்பு நல்ல பிள்ளைகளைப் போல் நின்றவர்கள், 'சார்.. நாங்கள் அரிதான சில தாவரங்களைச் சேகரிப்பதற்காக ஒரு மலைப்பகுதிக்கு சென்றிருந்தோம். அங்கிருந்து நேராக பரீட்சை எழுத கல்லூரிக்கு வந்துவிடலாம் என்ற திட்டத்தில், விடியற்காலை காரில் புறப்பட்டோம். வழியில் கார் பஞ்சராகிவிட்டது. அதனால் பரீட்சை எழுத முடியவில்லை. நீங்கள் தான் பெரிய மனசு பண்ணி, எங்களுக்கு மாற்றுப் பரீட்சை வைக்க வேண்டும் .." என்று பொய்யை மெய்போல் உருகி சொன்னார்கள்.

பேராசிரியரும் ஒப்புக் கொண்டார். அந்த நான்கு மாணவர்களையும் நான்கு வெவ்வேறு அறைகளில் அமர வைத்து பரீட்சை எழுதச் சொன்னார். மாணவர்களுக்கு செம குஷி. உற்சாகத்துடன் பரீட்சை எழுத உட்காந்தார்கள். முதல் கேள்வி மிகவும் சுலபமாக இருந்தது. மாணவர்கள் அதற்கு விடை எழுதி விட்டு அந்த கேள்விக்கான மதிப்பெண் என்ன என்று பார்த்தார்கள். ஐந்து. சரி என்று அடுத்த பக்கத்தை திருப்பினார்கள். 95 மதிப்பெண்கள் என்ற குறிப்புடன் காணப்பட்ட அந்த கேள்வி, அவர்களின் முகத்தை அறைந்தது. அந்தக் கேள்வி- 'உங்கள் காரில் பஞ்சரானது எந்த டயர்?'

பஞ்சர் என்று பொய் சொன்னார்களே தவிர.. இப்படி ஒரு கேள்வி வரும், அதற்கு இந்த டயர் தான் பஞ்சர் ஆனது என்று நாலு பேரும் ஒன்று போல் பதிலளிக்க வேண்டும் என்று பேசி வைத்துக் கொள்ளவில்லையே!

பொய் என்பது ஒரு தீக்குச்சியைப் போல. அது அந்த கணத்துக்கு மட்டுமே பலன் கொடுக்கும். உண்மை என்பது சூரியனைப் போல.. அது வாழ்நாள் முழுதும் மட்டுமல்ல. வாழ்ந்து முடிந்த பிறகும் கூட பலன் கொடுக்கும்..."

ஏழை! பணக்காரன்! வித்தியாசம்...


காசு இல்லாதவன்
மெழுகுவத்தி ஒளியில் உண்கிறான்
தன் வீட்டில்,

காசு உள்ளவன் விலைகொடுத்து
காண்டில் லைட் டின்னரில் உண்கிறான்
நட்சத்திர உணவகத்தில்.!

காசு இல்லாதவன்
வீட்டுக்கு வெளியில்
நட்சத்திரங்கள் கொண்ட வானத்தை பார்த்துக்கொண்டு உறங்குகிறான்,

காசு உள்ளவன்
வீட்டு விட்டத்தில்
நட்சத்திர சுவரொட்டிகளை பார்த்துக்கொண்டு உறங்குகிறான்.!

காசு இல்லாதவன்
வயிறை வளர்க்க ஓடி உழைக்கிறான்,

காசு உள்ளவன்
வயிறை குறைக்க ஓடி களைக்கிறான்.!

உழைப்பை கொண்டு சாதிப்பான்
காசு இல்லாதவன்,

சாதிப்பவனை பணத்தை கொண்டு வாங்குவான்
காசு உள்ளவன்.!

காசு இருந்தாலும் இல்லாவிட்டாலும் நமக்கு கிடைப்பது நிச்சயம் கிடைக்கும்.