பொறுமையாய் எங்களை
பூமியில் ஈன்றவள்
பூமியில் ஈன்றமைப்
பூவாகக் காத்தவள்
வறுமையின் எதிர்ப்பிலும்
வளமாகக் காத்தவள்
வளமாகக் காத்தெம்மை
வாழ்வித்த தாயவள்
பெற்று முகர்ந்தவள்
பெருமையைக் கொண்டவள்
பேரிட்டுப் பூரித்து
பாராட்டி வளர்த்தவள்
கற்றுச் சிறந்திட
கதை பல சொன்னவள்
கண்கண்ட தெய்வமாம்
அன்னையைப் போற்றுவோம்
உதிரத்தை பாலாக்கி
உண்ணக் கொடுத்தவள்
அடுத்தவர் பசிக்குத்தன்
உணவையும் கொடுப்பவள்
அதிர்ந்து பேசாமலே
அன்போடு அணைப்பவள்
அகிலத்தில் தெய்வமாம்
அன்னையை போற்றுவோம்
No comments:
Post a Comment