Showing posts with label தமிழ் கருத்துகள். Show all posts
Showing posts with label தமிழ் கருத்துகள். Show all posts

Thursday, February 18, 2016

எகிப்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள்!!!

எகிப்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள்!!!
பல ஆதரங்களுடன் விளக்கும் ஆய்வாளர்கள்!!!


கி.மு.6000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர் அங்கு வாழ்ந்தனர். “Comparison of Badalian and primitive Indian Races" என்ற நூலில் பிரெந்தர் ஸ்தொதியார் என்ற ஆய்வாளர், 1927ல் எகிப்தில் தோண்டியெடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் தமிழர்களுடையவை என்பதை ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.

நைல் நதிக்கரையில் வாழ்ந்த ஜெர்சியர்கள் தமிழர் மரபில் வந்தவர்கள் என்று ஒக்ரான் (Autran) என்ற ஆய்வாளர் உறுதி செய்கிறார். நைல் நதி என்பதும் ஒரு தமிழ் வார்த்தை தான். நீல நதி என்பது தான் நைல் நதியாக திரிந்துவிட்டது.

தமிழர்கள் நீல நதி என்று சொன்னதைத்தான் அப்படியே Nilo (நீலோ) என இத்தாலியிலும், அதை Nile (நைல்) என்றுஆங்கிலத்திலும் சொல்லப்படுகிறது.
இறந்தவர்களை புதைப்பது தமிழர் மரபு. எரிக்கும் இடம் சுடுகாடு, புதைக்கும் (இடும்) இடம் இடுகாடு.

எளிய மனிதர்கள் இறந்தால் சிறுகுழி வெட்டி அதில் இட்டு புதைப்பர். அதற்கு சிற்றிடு (சிறு +இடு) என்று பெயர்.

அரசன் போன்ற உயர்நிலை மக்கள் இறக்கும்போது, பெரும் அளவில் கட்டடம் எழுப்பி அதில் இடுவர். பெரிய அளவில் இடப்படுவதால் (அடக்கம் செய்யப்படுவதால்) அது பெரும்+இடு = ”பெருமிடு” என்று அழைக்கப்பட்டது. அதுவே ‘பிரமிடு’ என்று ஆனது.

ஆக, பிரமிடு என்பது தூய தமிழ்ச்சொல். தூயத் தமிழ்ச் சொல் ஆளப்பட்ட இடம் தமிழர்கள் வாழ்ந்த இடமாகும் அங்குக் கட்டப்பட்டதும் அவர்கள் கட்டியவை என்பது உறுதியாகிறது.

Edward pokoke (1604-1691) என்ற ஆய்வாளர், Indian in Greece என்ற நூலில் சிந்து சமவெளி மக்களும், எகிப்தில் வாழ்ந்தவர்களும் ஒரே இனமக்கள், அவர்கள் சிந்து வெளிப் பகுதியிலிருந்து, பெர்சிய வளைகுடாவைக் கடந்து Oman, Hadramont, Yeman கரை வழியாக எகிப்து, நபியா, அபிசினியா பகுதியில் பரவினர் என்கிறார். சிந்து சமவெளி பகுதியிலும் தமிழ் நாகரிகம் இருந்ததற்கான பல ஆதாரங்கள் உள்ளது....

Adolf Erkman (1854-1937) Life in ancient Egypt என்ற நூலில் பாண்டிய நாட்டவர்கள் (தமிழர்கள்) எகிப்தில் பரவி எகிப்திய நாகரிகத்தை உருவாக்கினர் என்கிறார்.

siatic researchers (vol.III.1702) வெளிவந்த கட்டுரையில் British Lt.colonel wilford, பல சான்றுகளைக் காட்டி, பழங்கால தமிழர்கள் எகிப்தில் குடியேறியதைத் தங்கள் குடியேற்ற நாடாக்கினர் என்கிறார்.

"Heinrich Kari Brugsh" - "History of Egypt" என்ற நூலில் தமிழர்கள் 8000 ஆண்டுகளுக்கு முன் எகிப்தில் குடியேறி தங்கள் கலை மற்ற உன்னத நாகரிகத்தை அங்கு நிலை நாட்டினர்.

இதே கருத்தை Bengsch Bey என்ற எகிப்திய வரலாற்றாசிரியரும் கூறுகிறார்.

“எகிப்து நாகரிகம் பண்டைய தமிழர் நாகரிகம் என்பது அய்யத்திற்கு இடமின்றி தெரிகிறது, என்கிறார். Louis Jacolliot (1837 - 1890) என்ற பிரஞ்சுக்காரர் Bible dane l"Inde)
LIliane Hornbergar என்ற பிரஞ்சு அறிஞர் “எகிப்தின் முதல் வமிசத்து மன்னன் சிந்து சமவெளிப் பகுதியிலிருந்து வந்த தமிழர்” என்கிறார்.

Sunday, January 24, 2016

தமிழர்கள் பயன்படுத்திய நுண்ணிய அளவீடுகள்






Power of Tamil Language - One of the Oldest and greatest languages in the World!!!

தமிழனைத் தமிழன் தூக்கி விடவேண்டும்



ஒரு தமிழ் நிறுவனத்தின் சாதனையைப் பார்த்து இன்று சில அந்நிய நிறுவனங்கள் பயப்படுகிறது...

தென்மாவட்டத்தை சேர்ந்த (திருநெல்வேலி அல்லது விருதுநகர்) சேர்ந்த காளிமார்க் நிறுவனம் தயாரிக்கும் குளிர்பானம் தான் ”BOVONTO”.1916 ஆம் ஆண்டு பழனியப்பன் என்பவரால் தொடங்கப்பட்டது

தமிழகத்தில் உலகமயமாக்கலுக்கு முன்பு கொடி கட்டி பறந்த கலர்,சோடா போன்ற தமிழக தயாரிப்பு நிறுவனங்களுக்கு பல மாநிலங்களில் நல்ல வரவேற்பு இருந்த...ு வந்தது. ஆங்கிலேயர் அட்சிக்காலத்தில் ”செபென்சர்ஸ்” என்ற ஆங்கிலேய நிறுவனத்தின் கடும் போட்டியை மீறி தனது பயணத்தை தொடங்கியது. உலகமயமாக்கலுக்கு பிறகு அமெரிக்க நிறுவனங்களான PEPSI,COCA COLA தனது நிறுவனங்களின் சந்தையை விரிவாக்க ஏற்கெனவே உள்ள உள்ளூர் தமிழக நிறுவனங்களை ஒழித்து கட்டும் முயற்சியில் ஈடுபட்டன. அதில் வெற்றியும் கண்டன.ஆனால் இந்த சந்தைக்கான போரில் சில தமிழக நிறுவனங்கள் தப்பி பிழைத்தன.அதில் இன்று வரை உறுதியோடு பணம் கொழிக்கும் அந்நிய நிறுவனங்களின் போட்டியை மீறி தனது தரமான தயாரிப்பின் மூலம் மக்களிடம் நிலைத்து நிற்பது திருநெல்வேலியை சேர்ந்த BOVONTO நிறுவனம் தான்.

அந்நிய மோகத்தில் சில காலம் இந்த பெப்ஸி,கோகோ கோலாவை அதன் கண்கவரும் விளம்பரங்களால் விரும்பி வாங்கிய மக்கள், பெப்ஸி கோக்கில் பூச்சி மருந்து கலந்துள்ளதை அறிந்து அதனை வாங்குவதை குறைத்துக்கொண்டனர். அதனை மீறி இன்று மக்களுக்கு ஆபத்தான குளிர்பானத்தை தங்கள் விளம்பரத்தில் நடிகர்களை நடிக்க வைத்து பணத்தை கோடி கோடியாக கொட்டி தங்கள் விற்பனையை தொடர்ந்து நடத்தி வருகின்றன.இதனை மக்களும் ஏமாந்து குடித்து வருகின்றனர்.

ஆனால் ஆரம்ப காலகட்டங்களில் தங்களின் வியாபார நுணக்கங்களை மீறி தனது தரமான தயாரிப்புக்காக வாடிக்கையாளர்களிடம் `BOVONTO' அதிகளவில் விற்பனையாவதை கண்டு pepsi, coca cola போன்ற பூச்சி மருந்து வியாபாரிகள் பயந்து நடுங்கினர்..

குளிர்பான சந்தையில் நடந்த நிகழ்வுகளை பார்த்தால் தமிழ்க நிறூவனங்களை ஒழித்துகட்ட செயற்பட்ட இந்த கார்ப்பரேட் நிறுவங்களின் சூழ்ச்சி புரியும். பெப்ஸி , கோலாவை விட பொவெண்டோ விரைவில் விற்பனையாவது கண்டு முழு வேகத்தில் தங்கள் கார்ப்பரேட் மூளை கசக்கி பிழிந்து ஒரு திட்டத்தை தீட்டின. அதன் முதல் கட்டமாக ஆரம்பத்தில் கண்ணாடி பாட்டில்களில் விற்பனையான BOVONTO வின் காலி பாட்டில்களை கடைகடையாக ஏறி வாங்கி குவித்தனர். அந்த பாட்டிலின் விலையை(ரு.12) விட அதிக அளவு நம் வியாபாரிகளுக்கு கொடுத்து அவற்றை பெற்றனர்.மொத்தமாக வாங்கிய பாட்டில்களை உடைத்துவிட்டனர்.

இந்த சதியால் BOVONTO நிறுவனத்தால் புதிய பாட்டில்களை உடனே தயாரிக்கவும் முடியவில்லை. தனது குளிர்பான வியாபாரத்தை தொடரமுடியாமல் போனபோது மக்கள் விளம்பரங்களில் பார்த்த பெப்ஸி கோக் போன்ற குளிர்பானங்களை வாங்கி குடித்தனர். உள்ளூர் பியாபாரிகளிடம் தங்கள் குளிர்பானத்தை விற்றால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி தங்கள் நிறுவன தயாரிப்புகளை மட்டும் வாங்கிகுவிக்க வைத்தன.

இந்த நிறுவனங்களின் சதியை உணர்ந்து கொண்ட BOVONTO நிறுவனம் பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பாட்டில்களின் மூலம் தனது தரமான தயாரிப்புக்கு உள்ள வாடிக்கையாளர்களிடம் தான் பெற்ற நன்மதிப்பை கொண்டு தனது சந்தையை தக்க வைத்துக்கொண்டது. பின்பு தனக்கென ஒரு பாட்டில் தயாரிக்கும் தொழிற்சாலையையும் அமைத்துக் கொண்டு முன்னேறியது.இன்றளவிலும் குளிர்பான சந்தையில் நிலைத்து நிற்கும் ஒரே தமிழக நிறுவனம் காளிமார்க் தான்.

( கர்நாடகாவில் சில விவசாயிகள் பூச்சி மருந்துக்கு பதிலாக கோக்-கை பயன்படுத்தியதால் அமோக விளைச்சல் பெற்ற செய்தியை அறிந்தும், பெப்ஸியில் கரப்பான் பூச்சிகளை கண்டெடுத்த பின்பும் அதனை நம் மக்கள் வாங்கி குடிப்பது இன்றும் தொடர்கிறது)

ஆனால் ,இன்றளவிலும் தனது தரத்தில் சிறு குறையில்லாமல் தொடர்ந்து தனது தயாரிப்புகளை வழங்கி வருகிறது காளிமார்க் நிறுவனம். மாற்றாக ஒரே ஒரு முறை நம்மூர் தயாரிப்பான `BOVONTO'வை குடித்துப்பாருங்கள்.அப்புறம் பெப்ஸி, கோக் (பூச்சி மருந்துகளை) வாங்கவே மாட்டிர்கள்.

கார்ப்பரேட்டின் சூழ்ச்சியை முறியடித்த ஒரு தமிழ் நிறுவனத்தின் தயாரிப்பை குடிப்பதால் ஒரு தமிழ் நிறுவனத்திற்கு ஊக்கமளிக்கும் வகையிலும், ஒரு தரமான உள்ளூர் தயாரிப்புக்கு நம் பணத்தை செலவளித்த வகையிலும் நமக்கும் தமிழனாய் ஒரு பெருமை உண்டு.அதே போல் நமது செலவாணியும் உள்ளூர் வியாபாரியிடமே இருக்கும்.

ஆனால் PEPSI,COKE க்கு செலவளிக்கும் ஒவ்வொரு ரூபாயும் அமெரிக்க நிறுவனத்திடம் சென்று விடும்.
மேலும் தரமற்ற பொருட்களால் நம் உடலுக்கும் கேடு விளைவிக்க கூடியவை.

பூச்சி கொல்லி மருந்துகளான PEPSI, கோக், போன்றவற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றவும். ஒரு தமிழனைத் தமிழன் தூக்கி விடவேண்டும்

Thursday, January 14, 2016

பீட்டா முகமூடிக் கிழிப்பு


என்ன நடக்கிறது நம் தமிழ்நாட்டில்...?♻
5 பேர் சேர்ந்து வேறு ஒரு மாநிலத்தில் இருந்து,
7 கோடி மக்கள் உள்ள ஒரு மாநிலத்தை கட்டுபடுத்துகிறார்கள்..
எங்கோ ஒரு நாட்டில் இருந்து நம் பாரம்பரியத்தை விட சொல்கிறார்கள் சிலர்...
நாம் அவர்கள் சொல்வதை கேட்டு தலை ஆட்டி கொண்டும்,
அனுமதி தாருங்கள் என்றும் பிச்சை கேட்டு கொண்டு இருக்கிறோம்...
இவர்கள் யார் நமக்கு அனுமதி வழங்க என்று யாரும் எதிர்ப்பதில்லை.....?
யார் யாரோ நம்மை அடிமையாக்குகிறார்கள், நாளை நாம் சாப்பிட வேண்டும் என்றாலும் ஒருவன் அனுமதி கொடுக்க வேண்டி இருக்கும் போல..?
நாளை நாம் உடுத்து சேலையை கழட்டி போட சொல்வார்கள்..
வேஷ்டியை கழட்டி போட்டு அம்மனமாக செல்லுங்கள் என்று ஒருவன் நமக்கு ஆணை இடுவான்.
நாம் அதையும் செய்வோம்..
நாம் தான் அடிமையாய் வாழ கற்று கொண்டோமே மானம் கெட்டு........
தமிழனின் பாரம்பரியத்தை தடுக்க இவர்கள் யார்...?
இங்கு காளைகளை சித்திரவதை செய்ய என்ன இருக்கிறது.
வருடம் முழுவதும் தன் பிள்ளையை போல் காக்கும் காளையை எப்படி ஒருவன் துன்புறுத்துவான்.....?
ஒவ்வொரு தமிழனும் எழுந்து இதை கேட்கவில்லை எனில் இன்று இந்த காளைகள் இனம் அழிந்து வருவதை போல நாளை தமிழ் இனமே அழிந்து விடும்..........
தமிழன் என்ற பெருமையை விடுத்து ஒற்றுமை இல்லாமல் அடிமைகளாய் வாழ்வோம்.......
ஒரு நாள் வாழ்ந்தாலும் தமிழனாய் வாழ்வோம்..
இல்லை என்றால் இந்த அகிலமே வேண்டாம் என்று அனைத்தையும் வீழ்த்துவோம்..
இன்று ஒரு நாள் லைக்கை மறந்து...
தமிழன் என்ற திமிருடன் பகிருங்கள்.
சல்லிக்கட்டும் உலக அரசியலும் :
இந்த பதிவு சற்றே பெரிதாக இருக்கும், ஆனால் இதன் முடிவில் தமிழர்கள் சந்திக்கப்போகும் பேராபத்தினை நிச்சயம் உணர்வீர்கள். ஆகையால் சிறிது நேரம் ஒதுக்கி கண்டிப்பாக படிக்கவும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் அடிப்படை உணவான பால் இரண்டு வகைப்படும் (2 types of protein); இவை A1 மற்றும் A2 என்று வகையருக்கப்படுகிறது. உலகிலுள்ள அனைத்து பாலூட்டிகளும் இயற்கையாக A2 வகை பாலையே சுரக்கின்றன. மனிதனின் தாய்பாலும் இந்த A2 வகை பால் தான். இயற்கையாக A2 வகை பாலை தான் மனிதர்களால் செரிக்க இயலும். ஆகவே நம் முன்னோர்கள் இதே வகை பாலை சுரக்கும் நமது பசுவினங்களின் பாலை நம் குழந்தைகளுக்கு கொடுக்க ஆரம்பித்தனர். ஆனால் பால் வியாபாரம் வர்த்தக மயமாக்கப்பட்டதற்கு பிறகு ஐரோபாவில் அதிகமாக பால் கறக்கும் மாடுகளை மட்டுமே தேர்வு செய்து அவற்றை மட்டுமே இனப் பெருக்கம் செய்ய அனுமதித்தனர் (selective breeding);
இவ்வாறு செய்தமையால் இவ்வகை மாடுகளில் மரபணு மாற்றம் ஏற்ப்பட்டது(mutation).

இதன் விளைவாக A1 என்ற பால் வகை உருவானது. சுவையற்ற இப்பால் உடலுக்கு தீங்கு செய்யக்கூடியது. சக்கரை நோய், புற்றுநோய் போன்ற நோய்கள் வருவதற்கு இந்த A1 வகை பாலும் ஒரு முக்கிய காரணமாகும். குழந்தைகளுக்கு இந்த A1 வகை பாலை செரிக்கும் ஆற்றல் இல்லை. இப்பால் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவிழக்க செய்யும்.
சரி, இது இந்த அளவுக்கு மட்டுமே தீங்கு விளைவிக்க கூடியது என்று நினைத்தால், இப்பாலை உற்பத்தி செய்யும்முறை இதைவிட கொடூரமான தீங்குகளை ஏற்ப்படுதக்கூடியது. அதாவது ஒரு மாடு பால் சுரக்க வேண்டுமென்றால் அது கன்று ஈன்று இருக்க வேண்டும். அந்த கன்றைப் பார்க்கும்போது தாய்மாட்டுக்கு இயக்குநீர்(hormone) சுரந்து அது பாலை சுரக்க தூண்டும். ஆனால் இது பல மாடுகள் இருக்கும் பண்ணையில் சாத்தியமில்லை. ஆகையால் மாட்டுப் பண்ணையாளர்கள் செயற்கையாக இயக்குநீர்களை மாட்டின் உடம்பில் ஊசியின் மூலமாக செலுத்தி பால் சுரக்க வைக்கின்றனர். இவ்வாறு செய்வதால் மாட்டின் பாலிலும் இந்த இயக்குநீர்களின்(hormone) அளவு அதிகமாக இருக்கிறது. இந்த இயக்குநீரின் பெயர் ஈத்திரோசன் (Estrogen). இது பெண்ணிய இயல்பை தூண்டும் இயக்குநீராகும். இந்த ஈத்திரோசன் (Estrogen) கலந்த A1 பாலை உண்ணும் பெண் குழந்தைகள் சிறு வயதிலேயே பூப்படைகிறார்கள், மற்றும் தமிழர்கள் போற்றிக் காக்கும் கற்ப்பொழுக்கத்தையும் கெடுக்கும் விதமாக பிற பாலின ஈர்ப்பு தூண்டலை இயல்பு நிலையிலிருந்து அதிகப்படுத்தும்; அதுமட்டுமின்றி ஆண் குழந்தைகளுக்கு சோம்பேரித்தனத்தையும், பாலின சம நிலை மாற்றத்தையும் (திருநங்கைகளாக மாறுதல்) ஏற்ப்படுத்தும். இது ஒரு சமுதாய பிரச்சனையே தூண்டிவிடும் அளவிற்கு கொடியது.
தமிழகத்திலுள்ள அனைத்து நாட்டு மாட்டினங்களும் A2 பாலை சுரக்கக்கூடியது. இவைகள் பாலை கம்மியாக சுரந்தாலும் அது உடலுக்கு எந்த வித தீங்கையும் உண்டாக்குவதில்லை. மனிதர்களுக்கு உகந்த பாலும் இந்த A2 பாலே. சரி, சல்லிக்கட்டுக்கும் உலக அரசியலுக்கும் என்ன தொடர்பு என்று கேட்க்கிறீர்களா? கொஞ்சம் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொள்ளுங்கள்! தமிழகத்திலுள்ள நாட்டு மாட்டினங்களின் சாணத்தில் இருந்து பெறப்படும் பொருட்களின் மூலத்திலிருந்தே இயற்க்கை விவசாயம் (natural farming) செய்ய பயன்படும் பூச்சுக்கொல்லி, உரம், பஞ்சகாவியா, போன்ற விவசாயத்திற்கு தேவையான பொருட்கள் செய்ய முடியும். இது சர்சி(jersey) வகை மாடுகளின் சாணத்திலிருந்து செய்தாலும் பயன்தராது. ஆகவே மோன்சண்டோ (Monsanto) போன்ற பெரிய நிறுவனங்கள் இயற்க்கை விவசாயத்தை செய்ய உதவும் மாட்டினங்ககளை அழிப்பதற்காக இந்தியா முழுவதும் வெண்மை புரட்சி என்ற திட்டத்தை செயல்படுத்தி கிராம கிராமங்களாக சென்று சர்சி(jersey) மாடுகளை வினியோகித்தனர். இது படிப்படியாக இந்தியா முழுவதும் இருந்த நாட்டு மாடுகளை அழித்தே விட்டது. நமது கிராம மக்களுக்கு கூட நாட்டு மாட்டுக்கும் சர்சி மாட்டுக்கும் வித்யாசம் தெரியாமல் போய்விட்டது. ஆனால் தமிழகத்தில் மட்டும் ஏறு தழுவுதல் (சல்லிக்கட்டு) என்ற வீர விளையாட்டு இருந்தமையால் நமது ஆண் மாடுகள் காப்பாற்றப் பட்டு வந்தது. ஆண் மாடுகள் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பெண் மாடுகள் சேர்ந்தே காப்பாற்றப்பட்டு வந்தது. இது ஆரம்பத்தில் மோன்சண்டோ போன்ற பெரிய நிறுவனங்களுக்கு ஒரு தடையாக இல்லை. ஆனால் தற்போது தமிழகத்தில் வரும் இயற்க்கை வேளாண்மை சார்ந்த விழிப்புணர்வு அவர்களை கதிகலங்க செய்துவிட்டது. இந்தியா முழுவதும் காணாமல் போன நாட்டு மாடுகள் தமிழகத்தில் மட்டும் மிஞ்சி இருப்பது எப்படி என்று அவர்கள் தேடியபோதுதான் தமிழகத்தில் மட்டுமே உள்ள தமிழர்களின் வீர விளையாட்டான சல்லிக்கட்டு (ஏறு தழுவுதல்) நாட்டு மாட்டினங்களை வளர்ப்பதை ஒரு கடமையாகவே கொண்டுள்ளனர் என்பது புலப்பட்டது. இதை எப்படியாவது முடக்க வேண்டும் என்பதற்காக தான் சல்லிகட்டிற்கு தடை செய்ய முயற்சி செய்கின்றனர்.
தமிழர்களே! ஏறு தழுவுதல் என்பது நமது இனத்தின் இறையாண்மை சார்ந்தது. இது கிட்டத்தட்ட ஒரு மதம் போன்றது. ஏனெனில் மாட்டை பிடிக்கும் வீரர்கள் விரதமிருந்து அம்மாட்டினை பிடிக்கிறார்கள். ஆகவே இது ஒரு சமயம் சார்ந்த நம்பிக்கையாகவே நம் மக்களால் கருதப்படுகிறது. இதை மாற்றும் அதிகாரம் இந்தியாவிற்கே இல்லை. ஆகவே, நமது அடையாளமான எதையும் இனி இழக்க வேண்டாம். அறிவுசார் தளத்தில் ஒன்றாக நின்று நம்மினத்தை காப்போம். இது Fwd msg.அல்ல நம் நாட்டு பசு மாடுகள் பற்றிய விழிப்புணர்வு இதை அதிகமாக பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்
நன்றி இளையதலைமுறை விவசாயி...
யார் இந்த பீட்டா?
--------------------------
‪#‎PETA‬- People for the ethical treatment of animals என்று தன்னை அழைத்துக் கொள்ளும் இந்த அமைப்பானது 1980 ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் இயங்கி வருகிறது. அமெரிக்காவில் ஆதரவற்ற விலங்குகளைப் பாதுகாக்கும் ஒரு காப்பகம் என தன்னைப் பதிவு செய்து கொண்டது.
(எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் நம்மூரில் முதியோர் காப்பகங்கள் இயங்கி வருவதைப் போல) சரி... அதன் பின்னர் நடந்தது என்ன? வீதியில் ஆதரவின்றி அலையும் நாய்கள் மற்றும் பூனைகளைக் காப்பாற்ற களத்தில் குதிக்கப் போவதாக அறிவித்தது பீட்டா.
ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான போன்கால்கள் பீட்டாவிற்கு தெருநாய்களைப்பற்றி வரத் துவங்கின. இலட்சக்கணக்கான விலங்குகள் காப்பகத்தில் குவிந்துவிடவே அமெரிக்க அரசை நிர்பந்தப்படுத்தி ஒரு சட்டம் இயற்ற வைத்தது பீட்டா.
அந்தச் சட்டத்தின் படி பதினைந்து நாட்கள் பீட்டா ஒரு ஆதரவற்ற நாயைப் பராமரிக்கும். அந்தப் பதினைந்து நாட்களுக்குள் யாரும் அந்த நாயைத் தத்தெடுக்க முன்வராவிட்டால் பீட்டா அந்த நாயைக் கருணைக் கொலை செய்து கொள்ளலாம்.
இவ்வாறு 2015 ம் ஆண்டு மட்டும் பீட்டா கொலை செய்த நாய்கள், பூனைகள், முயல்கள் மற்றும் இன்னபிற விலங்குகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?
அதிர்ச்சி அடைய வேண்டாம்...
35000. ஆமாம் நண்பர்களே... முப்பத்தி ஐந்து ஆயிரம் !!!
இந்தக் கருணை நிறைந்த மகா கொலைகாரர்கள் நம்மிடம் வந்து சொல்கிறார்கள்...
நீ மாட்டு வாலைத் திருகுகிறாய்!
கொம்பைப் பிடிக்கிறாய்!
கழுத்தைக் கட்டிக் கொண்டு அதைத் துன்புறுத்துகிறாய்!
அதனால் நீ மாட்டை மிருக வதை செய்கிறாய்... எனவே ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை செய்ய வேண்டும்!
'சாத்தான் வேதம் ஓதுகிறது' என்பார்களே நம்மூரில்... பீட்டா செய்வது அதுவே தான்!!
பீட்டா - மிருகவதை வியாபாரம்
-----------------------------------------------
அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் பீட்டா கருணைக் கொலை என்ற பெயரில் ஏன் இத்தனை இலட்சம் நாய்களையும், பூனைகளையும்,முயல்களையும் கொல்ல வேண்டும்?
அதற்கு உணவு அளித்துப் பராமரிக்கப் பணமும், இடமும் இல்லை என்பது மட்டும் தான் உண்மையான காரணமா? இதற்கான பதிலில் தான் இருக்கிறது சூட்சுமம்!
அமெரிக்காவில் வளர்ப்புப் பிராணிகள் விற்பனை என்பது பல்லாயிரக்கணக்கான கோடிகள் புரளும் மிகப் பெரிய மார்க்கெட்.
எனவே வளர்ப்புப் பிராணிகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் பீட்டாவிற்கு மிகப் பெரும் பணத்தை நிதியுதவி என்ற பெயரில் தொடர்ந்து வழங்கி வருகின்றன.
பீட்டாவின் இந்த கருணைக் கொலைகள் அவர்கள் வியாபாரம் சரிந்து விடாமல் உயர்ந்து கொண்டேயிருக்க உதவுகிறது என்பது தான் உண்மை.
சரி.
அப்படியானால் அமெரிக்காவில் பீட்டாவைத் தவிர வேறு ஆதரவற்ற விலங்குகளைக் காப்பாற்றும் அமைப்புகள் இல்லையா? என்று நீங்கள் கேட்கலாம்.
நிறைய இருக்கின்றன.ஆனால் பீட்டா அந்த நிறுவனங்கள் மீது தனது உளவாளிகளை ஏவி அவர்கள் அந்த விலங்குகளைப் பராமரிக்கும் விதத்தை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கிறது. ( நம்மூர் ஜல்லிக்கட்டில் நடந்ததும் இதேதான்) அந்த ஆதாரங்களைக் கொண்டு நீதிமன்றத்தை அணுகி அவர்களை முடக்குகிறது.
போட்டியே இல்லாமல் நடக்கும் இந்த மிருகவதை வியாபாரம் பீட்டாவின் செல்வச் செழிப்பையும், செல்வாக்கையும் நாள்தோறும் அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றுகொண்டிருக்கிறது என்பதே இன்றைய நிலை!
சரி... நம்மூர் ஜல்லிக்கட்டை நிறுத்துவதில் பீட்டாவிற்கு ஏன் இத்தனை அக்கறை?
பீட்டா - தோலிருக்க சுளை முழுங்கும் ஆளு !
-----------------------------------------------------------------
நம்ம தெருவில் சாதாரணமாக காணும் காட்சிதான் இது. இரண்டு அல்லது மூன்று மாடுகளை பக்கத்து வீட்டுக்காரர் சொந்தமாக வைத்திருப்பார்.
பகலில் அந்த மாடு சர்வசாதாரணமாக வீதிகளில் அலைந்து கொண்டிருக்கும். கிராமங்களில் வயல்வரப்பின் ஓரமாக மேய்ந்து கொண்டிருக்கும்.
நம் வீட்டுப் பெண்கள் அதற்கு வீட்டில் மீதமாகிப் போன கஞ்சியை பாத்திரத்தில் வைப்பார்கள். அதுபாட்டுக்கு குடித்துவிட்டு போய்க் கொண்டே இருக்கும்.
காலையிலும், மாலையிலும் அந்த மாட்டின் சொந்தக்காரர் பத்து வீடுகளுக்கு பால் ஊற்றிவிட்டுப் போவார். அவருக்கான வருமானம் அதுதான்.
இது போக ஆவின் மாதிரியான கூட்டுறவு பால் பண்ணைகளுக்கு இந்த மாடு வைத்திருப்பவர்கள் பால் கறப்பார்கள்.
பீட்டாவின் கண்ணை ஊறுத்துவது இதுதான். இதிலென்ன இருக்கிறது உறுத்துவதற்கு? என்று உங்களுக்குத் தோன்றலாம்.
தமிழ்நாட்டில் மட்டும் இது போல் சிறு விவசாயிகள் மற்றும் மாடு வளர்ப்பவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் பால் உற்பத்தி சந்தையின் மதிப்பு ஒரு ஆண்டிற்கு எவ்வளவு தெரியுமா நண்பர்களே?
மூன்றரை இலட்சம் கோடிகள்!
சரி... இதற்கும் ஜல்லிக்கட்டுக்கும் என்ன தொடர்பு?
இருக்கிறது. கோவில் மாடு என்ற ஒரு விஷயம் நம்ம ஊரில் உண்டு. அந்த மாடு வருடம் முழுதும் ஊர் சுற்றிக் கொண்டு ஜாலியாக இருக்கும்.
அந்த ஊரில் ஒரு முன்னூறு பசு மாடுகள் இருப்பதாக வைத்துக் கொண்டால் அத்தனை மாடுகளுக்கும் இனவிருத்தி செய்வது அந்த மாடுதான்.
இதுபோக ஜல்லிக்கட்டு விடுவதற்காக வளர்க்கப்படும் மாடுகளும் அந்த இனவிருத்தி வேலையைச் செய்யும். இந்த நாட்டு மாடுகள் அதிக பராமரிப்பு தேவைப்படாதவை.
சிறிய அளவிலான மேய்ச்சல் அதற்கான உணவுத் தேவையை தீர்த்துவிடும்.
ஜல்லிக்கட்டில் விடப்படுவது இது போன்ற காயடிக்கப்படாத நாட்டுமாடுகள் தான்.
வட இந்தியா மற்றும் கர்நாடகாவில் நடைபெறும் மாட்டுவண்டிப் பந்தயங்களில் பயன்படுத்தப்படுவது எல்லாமும் காயடிக்கப்பட்ட மாடுகளே!
எனவே தான் பீட்டா இந்த நாட்டுமாடுகளைக் குறிவைக்கிறது. இந்த மாட்டினத்தை முற்றிலும் அழிக்காவிட்டால் அவர்களால் கலப்பின மாடுகளை இங்கே இறக்கமுடியாது. கலப்பின மாடுகளுக்கு மேய்ச்சல் உணவு போதாது. அதற்கு தீவனம் வைத்தாக வேண்டும்.
உலகின் மிகப் பெரிய மாட்டுத்தீவன மற்றும் ஊக்க மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனம் பீட்டாவின் பின்னணியில் இருக்கிறது என்பதே உண்மை.
அவர்கள் கண்ணை தமிழகத்தின் மூன்றரை இலட்சம் கோடிகள் கொண்ட பால் உற்பத்தி சந்தை உறுத்திக்கொண்டே இருக்கிறது.
ஜல்லிக்கட்டை நிறுத்தாவிட்டால் அவர்களால் இங்கே காலூன்றவே முடியாது.
அதனால் தான் அவர்கள் இந்த வீரவிளையாட்டை மிருகவதை என்ற பெயரில் முடக்க தீவிரம் காட்டுகிறார்கள் !
* பீட்டா முகமூடிக் கிழிப்பு தொடரும்..

Monday, October 14, 2013

தெரிந்த திருப்பதி தெரியாத தகவல்கள்...

திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கி.மீ. தொலைவில் ‘சிலாதாரணம்’ என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்தப் பாறைகள் இங்கு மட்டும்தான் உள்ளன. இந்தப் பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும் இந்தப் பாறையிலிருந்து உருவாக்கப்பட்டதுதான்.

ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு வருடம் முழுவதும் பச்சைக் கற்பூரம் சாத்துகிறார்கள். இது ஒருவகை ரசாயனப் பொருள். அரிப்பைக் கொடுக்கக் கூடியது. இதை ஒரு கருங்கல் மீது தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணப் பாறைகளில் தடவினால் அவை வெடிப்பதில்லை.

எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஓர் இடத்தில் சிற்பியின் உளிப்பட்ட தடம் அதன் விளிம்புகளிலாவது தெரியும். உலோகச் சிலையானாலும் அதனை உருக்கி வார்த்த தடம் தெரியும். ஆனால், ஏழுமலையான் திருவுருவச் சிலையில் அப்படி எந்த அடையாளமும் தெரியவில்லை.ஏழுமலையான் திருமேனியில் நிறைய நுணுக்கமான வேலைப்பாடுகள் இருந்தாலும் நெற்றிச்சுட்டி, காதணிகள், நாகாபரணங்கள் எல்லாம் செதுக்கினாற்போலவே தோன்றாது; மாறாக புதிதாக செய்து போடப்பட்ட நகைகள் போலவே மெருகு மங்காமல், பளபளப்பாக இருக்கின்றன.

ஏழுமலையான் திருவுருவச் சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் கொண்டதாக இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகாலை 4:30 மணிக்கு குளிர்ந்த நீர், பால், திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன், வெப்பம் காரணமாக ஏழுமலையானுக்கு வியர்க்கிறது. பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள்.

திருப்பதி திருக்கோயில் மடப்பள்ளி (சமையலறை) மிகவும் பெரியது. பொங்கல், தயிர்சாதம், புளியோதரை, சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், மௌகாரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம் கேசரி, முந்திரி பருப்பு கேசரி போன்றவை தினமும் அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன.

திருமலையானுக்கு தினமும் ஒரு மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் இட்டு இதை மட்டுமே நிவேதிக்கிறார்கள். இது தவிர மேலே குறிப்பிட்ட எந்த பிரசாதமும் கர்ப்பகிரகத்திலுள்ள குலசேகரப்படியைத் தாண்டிச் செல்லாது.

ஏழுமலையான் அணியும் புடவை, 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட பட்டுப் பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. ஆனால், இதனை சாத்துவதாக ஒரு பக்தர் வேண்டிக் கொள்ளலாம். அவர், திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12,500 ரூபாய் செலுத்த வேண்டும். வாரத்தில் ஒருமுறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும்தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு இப்படி வஸ்திரம் சாத்தப்படுவதைக் காண்பதற்கு அந்த பக்தர் மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

உள் சாத்து வஸ்திரம் சாத்த இருபதாயிரம் ரூபாய் கட்டணம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சாத்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு இந்த உள் சாத்து வஸ்திரம் சாத்துவதைக் காண பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சீனாவிலிருந்து புனுகு, பாரீஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு, தங்கத் தாம்பாளத்தில் சந்தனத்தோடு, 51 வட்டில் பாலும் சேர்த்து கரைத்து அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும். காலை 4:30 மணி முதல் 5:30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்.

ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலை சுமார் 80 ரூபாய்.

சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்கு அனுப்பப்படுகின்றன.

ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடி என்கிறார்கள். இவருடைய நகைகளை வைத்துக்கொள்ள இடமும் இல்லை; மொத்தமாக சாத்தி அழகு பார்க்க நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒருமுறை உபரியாக உள்ள நகைகளை செய்தித் தாள்களில் விளம்பரப்படுத்தி ஏலம்
விடுகிறார்கள்.

ஏழுமலையானின் சாளக்கிராம தங்க மாலை 12 கிலோ எடை கொண்டது. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375 கிலோ. கோயிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் இங்கு மட்டும்தான் இருக்கிறது; வேறெங்கும் இல்லை. இதன் மதிப்பு ரூ.100 கோடி.

திருப்பதியில் உள்ள ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.

வெள்ளிக்கிழமைகள் மற்றும் மார்கழி மாத அர்ச்சனைகளில் வில்வ இலை உபயோகப்படுத்தப்படுகிறது.

சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவப் பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்படை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெறுகிறது. தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்மாவாகவும் சிவாம்சம் பொருந்தி ஈஸ்வரனாகவும் சக்தி ஸ்வரூபமாகவும் பாடி, அந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதி வைத்துள்ளார். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருப்பதி கோயிலுக்கு வந்திருக்கிறார். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்து சாமி தீட்க்ஷிதர் ஏழுமலையான் மீது சேஷ£சல நாமம் பாடலை வராளி ராகத்தில் பாடியுள்ளார்.

அபிஷேகத்தின்போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.

ஏழுமலையான் கோயிலின் தல விருட்சம் புளிய மரம்.

எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருச்சிலையிலும்கூட கையில் ஏதாவது ஒரு ஆயுதம் இருக்கும். ஆனால், ஏழுமலையான் கரத்தில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழிலக்கியத்தில் நம் முன்னோர்களால் ‘வெறுங்கை வேடன்’ என்று
போற்றப்பட்டார்.

பிரிட்டிஷார்களான சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன் போன்றோர் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர். திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை எந்த ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. அதன் பிறகு கிறிஸ்தவப் பாதிரியார்கள் சிலர் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட விரும்பினார்கள். ஆனால், அதற்கு ஆங்கிலேயத் தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடி பூஜைகள், அந்தக் கோயிலின் நடைமுறைப்படி நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பூஜைகள் சரிவர நடக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கம் வருமோ என்றும் கவலைப்பட்டார்கள்!

திருப்பதி அலர்மேல்மங்கைத் தாயாருக்கு அணிவிக்கப்படும், பருத்தியால் ஆன உள்பாவாடை, கத்வால் என்ற ஊரில் தயார் செய்யப்படுகிறது. செங்சு இனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். இப்படித் தயாரிக்கும்போது அவர்கள் மூன்று வேளை குளிப்பார்கள்; மது, மாமிசம் உண்ண மாட்டார்கள்.

ஏழுமலையானை வாரத்தில் 4 நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்ணுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் பாவித்து பூஜை செய்கிறார்கள்.

ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்றபடியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விட வேண்டும் என்பது இந்த புஷ்கரணியின் நீராடல் சம்பிரதாயமாகும்.

கி.பி. 1543ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர், பத்மாவதி தாயாருக்கு கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார். கி.பி.1764ல் நிஜாம் தௌலா என்பவரின் தலைமையில் வந்த முஸ்லீம் படைகளால் கோயில் இடித்து தரை மட்டமாக்கப்பட்டது. இதன் இடிபாடுகள் இன்றைக்கும் உள்ளன.

திருமலை திருக்கோயிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன. இவற்றில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை. 169 கல்வெட்டுக்கள் சாளுவ மன்னர்கள் காலத்தவை. 229 கிருஷ்ண தேவராயர் காலத்தவை. 251 அச்சுதராயர் காலத்தவை. 147 சதாசிவராயர் காலத்தவை. 135 கொண்டை வீடு அரசர் காலத்தவை. நந்திவர்மன் (பல்லவர்) ஆண்ட கி.பி. 830 தொடங்கி 1909வரையிலான கல்வெட்டுக்களில் 50தான் தெலுங்கு, கன்னட மொழிகளில் உள்ளன. மீதம் 1130 கல்வெட்டுக்களும் தமிழிலேயே உள்ளன..!!!

Monday, August 26, 2013

சில உணவுபொருட்களின் தூய தமிழ் வார்த்தைகள்



தமிழில் டீக்கு "தேநீர்',
காபிக்கு "குளம்பி' என்று
பெரும்பாலோருக்குத் தெரியும்.
மற்ற சில முக்கியமான உணவு
பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம்!

சப்பாத்தி - கோந்தடை

புரோட்டா - புரியடை

நூடுல்ஸ் - குழைமா

கிச்சடி - காய்சோறு, காய்மா

கேக் - கட்டிகை, கடினி

சமோசா - கறிப்பொதி, முறுகி

பாயசம் - பாற்கன்னல்

சாம்பார் - பருப்பு குழம்பு, மென்குழம்பு

பஜ்ஜி - தோய்ச்சி, மாவேச்சி

பொறை - வறக்கை

கேசரி - செழும்பம், பழும்பம்

குருமா - கூட்டாளம்

ஐஸ்கிரீம் - பனிக்குழையம், பனிக்கூழ்/பனிக்களி

சோடா - காலகம்

ஜாங்கிரி - முறுக்கினி

ரோஸ்மில்க் - முளரிப்பால்

சட்னி - அரைப்பம், துவையல்

கூல்ட்ரிங்க்ஸ் - குளிர் குடிப்பு

பிஸ்கட் - ஈரட்டி, மாச்சில்

போண்டா - உழுந்தை

ஸர்பத் - நறுமட்டு

சோமாஸ் - பிறைமடி

பப்ஸ் - புடைச்சி

பன் - மெதுவன்

ரோஸ்டு - முறுவல்

லட்டு - கோளினி

புரூட் சாலட் - பழக்கூட்டு

-----------------------------------------------------
தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டி திருத்தவும்